புலிகள் வளங்காப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புலிகள் வளங்காப்பு உச்சி மாநாட்டில் அறிவிக்கப் பட்டது.
இந்த நிகழ்வில், 2022 ஆம் ஆண்டிற்குள் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான Tx2 எனப்படும் ஒரு உலகளாவிய இலக்கினை உருவாக்கச் செய்வதற்காக புலிகள் காணப்படும் 13 நாடுகள் ஒன்றிணைந்தன.
உலகப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்தியாவிலேயே காணப்படுகின்றன.
புலிகள் வளங்காப்புத் திட்டம் ஆனது 1973 ஆம் ஆண்டில் (ஏப்ரல் 1) தொடங்கப்பட்ட மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.