TNPSC Thervupettagam

சர்வதேச புலிகள் தினம் – ஜூலை 29

July 30 , 2021 1126 days 511 0
  • காட்டுப் பூனைகளின் இனமான புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டி ஒவ்வொரு வருடமும் உலக புலிகள் தினம் அல்லது சர்வதேச புலிகள் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு அதன் 11வது சர்வதேச புலிகள் தினமாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Their Survival is in our hands” (அவற்றின் பாதுகாப்பு நமது கைகளில்) என்பதாகும்.
  • செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் என்ற உடன்படிக்கை கையெழுத்தானபோது உலக புலிகள் தினமானது நடைமுறைக்கு வந்தது.
  • இந்த உடன்படிக்கையானது 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் 13 புலிகள் வாழிட நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் வளங்காப்பு, அவற்றின் இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்தல் மற்றும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு இந்தப் புலிகளின் வாழிட நாடுகள் தீர்மானித்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்