ஐ.நா. அவையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் அனைவரிடத்தும் சட்டத்தின் முன்னான சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero discrimination Day) கொண்டாடப் படுகின்றது.
சமூக பரிமாற்றத்தின் அடையாளமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடையாளமான “வண்ணத்துப்பூச்சி” குறியீடு பூஜ்ஜிய பாகுபாட்டிற்கான சின்னமாக பயன்படுத்தப் படுகின்றது.
பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கும் இத்தினமானது, கண்ணியத்தோடு ஓர் முழுமையான ஆக்கப்பூர்வ வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா. அவை 2014 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று முதன்முறையாக பூஜ்ஜிய பாகுபாடு தினத்தைக் கொண்டாடியது.
ஐ.நா. எய்ட்ஸ் (UN AIDS) அமைப்பு 2013 ஆண்டு டிசம்பர் மாதம் உலக எய்ட்ஸ் தினத்தன்று பூஜ்ஜிய பாகுபாடு பிரச்சாரத்தை (Zero discrimination Campaign) தொடங்கியதிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகின்றது.