சர்வதேச பெண் குழந்தைகள் தின அனுசரிப்பின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், யுனிசெப் அமைப்பும் இணைந்து நடத்திய “பெண்களை மேம்படுத்துவதில் விளையாட்டுத் துறையின் பங்கு” எனும் தலைப்பின் மீதான குழு விவாத நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
இந்த குழு விவாதத்தில் யூனிப்செப்பின் நல்லெண்ண தூதரான சச்சின் டெண்டுல்கர் , இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் போன்றோர் பங்கேற்றனர்.
“புதிய இந்தியாவின் மகள்கள் – பேட்டி பச்சாவோ – பேட்டி படாவோ வாரம்” என்ற தேசிய வாரத்தினுடைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனுசரிக்கப்பட்ட சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று இந்த குழு விவாதம் நடைபெற்றது.
சர்வதேசபெண்குழந்தைகள்தினம்
2012 ஆம் ஆண்து முதல் அக்டோபர் 11 ஆம் தேதி அன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும், பெண்கள் எதிர்கொள்ளும் தனித்தன்மையுடைய சவால்களையும், பெண்களின் உரிமைகளையும் அங்கீகரிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகளின் போது, நெருக்கடிகளுக்கு முன்னும், பின்னும் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களின் மேல் உலக கவனத்தையும், நடவடிக்கைகளையும் ஊக்குவிக்க யூனிசெப் அமைப்பால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
பேட்டிபச்சாவோபேட்டிபடாவோவாரம் (9th to 14th Oct)
அக்டோபர் 9 முதல் 14 வரையிலான நாட்களை பேட்டி பச்சாசோ பேட்டி படாவோ வாரமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடிவருகிறது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (அக்டோபர் 11) ஐ முன்னிட்டு இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
இநத் நிகழ்ச்சியின் கருத்துரு - “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ வாரம் – புதிய இந்தியாவின் மகள்கள்”