சர்வதேச பெண் விமானிகள் சங்கம் (ISA+21 - International Society of Women Airline Pilots) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி உலகின் அதிக அளவிலான பெண் விமானிகளின் சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.
மேலும் இந்தியாவின் பெண் விமானிகளின் சதவிகிதமானது உலக சராசரியை விட இரு மடங்கு அதிகமாகும்.
உலக பெண் விமானிகளின் சதவிகிதம் 5.4 ஆகும்.
இந்தியாவின் தற்போதைய பெண் விமானிகளின் சதவிகிதம் 12.4 ஆகும்.
சமீபத்திய தரவுகளின் படி டெல்லியை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய விமான நிறுவனமான ஜீம் (Zoom) ஆனது உலகிலேயே அதிகபட்சமான பெண் விமானிகளை 30% என்ற அளவில் பணியில் அமர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் உலகின் அதிகப்படியான பெண் தளபதிகளை பணியமர்த்தியுள்ளது.