ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பேரிடர் குறைப்பு மற்றும் இடர்கள் பற்றிய விழிப்புணர்வோடு கூடிய உலக கலாச்சாரத்தை மேம்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தின் கருத்துரு- “பாதுகாப்பான வீடு, பேரிடர் வெளிப்பாடு மற்றும் இடம்பெயர்தலைக் குறைத்தல்”.
சமூக அளவில் மக்களிடையே பேரழிவு ஆபத்துக்குள்ளாகும் வெளிப்பாடுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் செயல்திறனுடைய நடவடிக்கைகளைப் பற்றி உலகளாவிய விழிப்புணர்வினை அதிகப்படுத்துவதை 2017 ஆம் ஆண்டின் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.