TNPSC Thervupettagam

சர்வதேச பௌத்த மாநாடு 2018

August 23 , 2018 2291 days 1010 0
  • சர்வதேச பௌத்த மாநாடு (IBC - International Buddhist Conference) 2018 ஆனது புதுடெல்லியில் நடைபெற்றது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இது துவக்கி வைக்கப்பட்டது.
  • இது சர்வதேச பௌத்த மாநாட்டின் 6-வது பதிப்பாகும். புத்தரின் பாதை - ஒரு வாழும் பாரம்பரியம் என்பது இதன் கரு ஆகும்.
  • இம்மாநாடு மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • IBC-2018 க்கு ஜப்பான் ஒரு பங்களிப்பு நாடாகும்.
  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகமானது சர்வதேச பெளத்த மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகிறது.
  • முந்தைய மாநாடுகள் செப்டம்பர் 2014ல் புத்தகயா மற்றும் வாரணாசியிலும் அக்டோபர் 2016ல் சாரநாத் / வாரணாசியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
  • 2016ல் நடைபெற்ற மாநாட்டில் ASEAN நாடுகள் கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்