வரலாறு முழுவதும் பெண்கள் மேற்கொண்ட சாதனைகளை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.
2018-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் ஐ.நா. அமைப்பினுடைய கருத்துரு “இதுவே நேரம்; பெண்களின் வாழ்வை மாற்றுவதற்கான ஊரக மற்றும் நகர்ப்புற செயல்பாடுகள்“ (“Time is Now: Rural and urban activists transforming women’s lives”).
சர்வதேச மகளிர் ஆண்டான 1975-ஆம் ஆண்டின் மார்ச் 8 அன்று ஐ.நா. அவை முதன் முதலாக தனது அதிகாரப் பூர்வ சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.