பெண்களின் பல சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பாலினச் சமத்துவத்தை விரைவுப்படுத்தச் செய்வதற்கான நடவடிக்கைக்கான ஒரு அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பெண்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ மற்றும் இந்தத் தினத்திற்கான பிரச்சாரத்தின் கருத்துரு, ‘உள்ளடக்கத்தினை ஊக்குவித்தல்’ என்பது ஆகும்.
1910 ஆம் ஆண்டில், கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் என்பவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்மொழிந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையானது 1975 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது.
1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாள் குறித்த அறிவிப்பினை வெளியிடுமாறு உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.