ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், உலகின் வேற்றுமையால் ஒன்றுபட்ட தன்மையைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் உலகம் ழுமுவதும் டிசம்பர் 20-ஆம் தேதி ஐ.நாவின் சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) கொண்டாடப்படுகின்றது.
உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்கவும், வளரும் நாடுகளில் குறிப்பாக அவற்றினுடைய மக்கள் தொகையின் மிக வறுமையுற்ற பிரிவினரிடையில் மனிதம் மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.