சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறை மன்றத்தின் (IMDRF) இணை உறுப்பினராக இந்தியா மாறியுள்ளது.
2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட IMDRF ஆனது உலகளாவிய மருத்துவச் சாதன ஒழுங்கு முறை அமைப்புகளின் குழுவாகும்.
சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறை விதிகளின் மீதான இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை விரைவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த மன்றத்தின் உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐக்கியப் பேரரசு, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தேசிய ஒழுங்குமுறை ஆணையங்களும் அடங்கும்.