இந்த நாள் மருத்துவத் தாதிகள் (தாய் சேய் செவிலியர்) செய்யும் பணிகளைப் போற்றவும், தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்களின் பங்கினை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
1987 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச மருத்துவத் தாதிகள் கூட்டமைப்பு (ICM) மாநாட்டில் இந்தத் தினத்திற்கான கருத்தாக்கம் தோன்றியது.
இந்தத் தினமானது முதன் முதலில் 1991 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Together again: from evidence to reality' என்பதாகும்.