இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது, சர்வதேசத் தகவல் தொடர்பின் வரையறை குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
“சர்வதேசத் தகவல் தொடர்பு” என்பது ஒரு நாட்டில் தோன்றி மற்றொரு நாட்டில் (இந்தியா உட்பட) பெறப் படும் தகவலைக் குறிக்கிறது.
‘சர்வதேச SMS குறுஞ்செய்தி’ என்பது SMS வசதி மூலம் வழங்கப்படும் சர்வதேச தகவல் அனுப்பும் முறையைக் குறிக்கிறது.
ஒரு நபருக்கு ஒரு செயலியிலிருந்து அனுப்பப்படும் எந்தவொரு (A2P) SMS செய்தியும் சர்வதேச குறுந்தகவலாகக் கருதப்படும்.
ஆனால் அதனை இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள எந்தவொரு மின்னணுச் சாதனம், கணினி அமைப்பு அல்லது கணினிப் பயன்பாடு ஆகியவற்றின் பயன்பாடு அல்லது தலையீடு இல்லாமல் உருவாக்கவோ, அனுப்பவோ அல்லது பெறவோ கூடாது.
‘உள்நாட்டுத் தகவல்’ என்பது இந்தியாவிற்குள் தோன்றி மற்றும் அனுப்பப்படும் ஒரு தகவலைக் குறிக்கிறது.
உள்நாட்டு SMS என்பது ஒரு குறுஞ்செய்தி வசதி மூலம் அனுப்பப் படும் உள்நாட்டுத் தகவலைக் குறிக்கிறது.