TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர்கள் தினம் – நவம்பர் 17

November 18 , 2017 2562 days 3211 0
  • சர்வதேச மாணவர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 17-ஆம் தேதி மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்டுவதற்காக   கொண்டாடப்படுகின்றது.
  • 1939-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் (Prague) உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நாஜிக்களால் ஜான் ஒப்லேடல் என்பவர் கொல்லப்பட்டதற்கும், செக்கோஸ்லோவாக்கியா ஆக்கிரமிக்கப்பட்டதற்கும் எதிராக பெரும் மாணவர் போராட்டம் நடைபெற்றது.
  • அம்மாணவர்கள் போராட்டத்தை நசுக்கிய நாஜிப் படையினர் ஒன்பது மாணவர் தலைவர்களை தூக்கிலிட்டனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் சித்ரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர். பின் செக்கோஸ்லோவாக்கியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இந்த நாளை குறிக்கும் விதத்தில் சர்வதேச மாணவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த தினம் முதன் முதலில் 1941-ல் இலண்டனில் உள்ள சர்வதேச மாணவர்கள் கவுன்சிலால் கடைப்பிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்