TNPSC Thervupettagam

சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டுத் திட்டம் - பிசா 2021

November 10 , 2019 1749 days 607 0
  • பிசா தேர்வின் (Programme for International Student Assessment – PISA) தரத்திற்கு ஏற்ப, அத்தேர்வில் பங்கேற்கக் கூடிய பள்ளிகளின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்தியா தயார்படுத்தி வருகின்றது.
  • PISA என்பது கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் 15 வயது நிரம்பிய மாணவர்களின் அறிவு மற்றும் திறன்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதாகும்.
  • இது பொது, தனியார் மற்றும் தனியாரால் நிதியுதவி அளிக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development) அமைப்பானது 2000 ஆம் ஆண்டில் PISA என்ற தேர்வை அறிமுகப் படுத்தியது. அதன் பின்னர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இத்தேர்வு நடத்தப் படுகின்றது.
  • இந்தியா 2009 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே PISA என்ற தேர்வில் பங்கேற்றுள்ளது.
  • ஒரு மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இத்தேர்வில் இந்தியா பங்கேற்காமல் விலகி இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டில் PISA தேர்வில் இந்தியாவின் பங்கேற்பிற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது OECD அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்