உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர்-3 ஆம் தேதி இயலாமைக் குறைபாடுகளைப் பற்றிய புரிதலை மக்களிடையே மேம்படுத்தவும், இயலாமைக் குறைபாடு உடைய நபர்களின் நல்வாழ்வு, உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு ஆதரவை திரட்டவும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது .
2017-ஆம் ஆண்டின் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் கருத்துரு “அனைவருக்குமான மீள்திறனும் நீடித்த தன்மையும் உடைய சமுதாயத்தை நோக்கிய மாற்றம்“ (Transformation towards sustainable and resilent soceities for all).
இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2.21 சதவீத மக்கள் இயலாமைக் குறைபாடுடையவர்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஏதேனும் ஒரு விதக் குறைபாடோடு உலகம் ழுமுவதும் 15.3 சதவீத மக்கள் வாழ்கின்றனர்.