TNPSC Thervupettagam

சர்வதேச மின்னணுக் கழிவு தினம் – 14 அக்டோபர்

October 16 , 2021 1047 days 390 0
  • இத்தினமானது 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது மறுபயன்பாடு, மீள்வு மற்றும் மறுசுழற்சி வீதங்களை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் உலகெங்கிலுமுள்ள மின்னணுக் கழிவுகளைச் சரியான முறையில் அகற்றுவதை ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
  • இந்த ஆண்டின் சர்வதேச மின்னணுக் கழிவு தினமானது மின்னணு தயாரிப்புப் பொருட்களுக்கு மறுசுழற்சி முறையை ஒரு நடைமுறையாக்குவதில் நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள முக்கியப் பங்கின் மீது ஈடுபாடு செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Consumer is the Key to circular Economy” என்பதாகும்.
  • இத்தினமானது 2018 ஆம் ஆண்டில் WEEE (Waste from Electrical and Electronic Equipment) என்ற மன்றத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்