TNPSC Thervupettagam

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலக் காடுகள்

March 13 , 2019 1956 days 621 0
  • ராம்சார் சாசனத்தின் “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலக் காடுகள்” என்ற தகுதியை இந்திய சுந்தரவனக் காடுகள் பெற்றுள்ளது.
  • இந்த சுந்தரவனக் காடுகளானது இந்தியாவின் 27-வது ராம்சார் சாசன இடமாக உருவெடுத்துள்ளது.
  • சுந்தரவனக் காடுகளானது இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா கழிமுகத்தின் சிற்றோடைகள், நீரோடைகள், நதிகளின் அமைப்புகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.
  • இந்திய சுந்தரவனக் காடுகளானது ஏற்கெனவே யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் உள்ளது. மேலும் இது வங்காளப் புலிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது.
  • சுந்தரவனக் காடுகளின் இடத்திற்குள் சுந்தரவன புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. மேலும் தேசியச் சட்டத்தின் கீழ் இதன் ஒரு பகுதி “முக்கிய புலிகள் வாழிடமாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த “புலிகள் காப்பக நிலத்தோற்றமாக” கருதப்படுகிறது.

 

        ராம்சார் சாசனம்

  • ராம்சார் சாசனம் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது சதுப்புநிலக் காடுகள், அதன் வளங்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒத்துழைப்புக்காக கட்டமைப்புகளை அளிக்கக் கூடிய அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இந்த சாசனமானது 1975 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்