சர்வதேச நடுவர் நீதிமன்றமானது பாகிஸ்தான் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் செம்புப் பிரித்தெடுத்தல் திட்டமான ரெக்கோ டிக் திட்டத்திற்காக ஒரு நிறுவனத்திற்குச் “சுரங்கக் குத்தகை அனுமதியை” சட்டவிரோதமாக மறுத்ததற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை உலக வங்கியின் சர்வதேச முதலீட்டுப் பிரச்சினைகள் தீர்வு மையத்தினால் (International Centre for Settlement of Investment Disputes - ICSID) தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெக்கோ டிக் சுரங்கமானது, அங்குள்ள தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றின் இருப்பிற்காகப் புகழ் பெற்று விளங்குகின்றது.