TNPSC Thervupettagam

சர்வதேச முதலீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு

July 16 , 2019 1832 days 623 0
  • சர்வதேச நடுவர் நீதிமன்றமானது பாகிஸ்தான் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் செம்புப் பிரித்தெடுத்தல் திட்டமான ரெக்கோ டிக் திட்டத்திற்காக ஒரு நிறுவனத்திற்குச் “சுரங்கக் குத்தகை அனுமதியை” சட்டவிரோதமாக மறுத்ததற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பிரச்சினை உலக வங்கியின் சர்வதேச முதலீட்டுப் பிரச்சினைகள் தீர்வு மையத்தினால் (International Centre for Settlement of Investment Disputes - ICSID) தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெக்கோ டிக் சுரங்கமானது, அங்குள்ள தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றின் இருப்பிற்காகப் புகழ் பெற்று விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்