முதியோர்களை தவறாக நடத்துதல் மற்றும் வயது முதிர்வு போன்ற முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இத்தினத்தின் நோக்கம் சமூகத்திற்கு முதியோர்கள் ஆற்றிய பங்களிப்பை ஊக்கப்படுத்துவதாகும்.
இந்த ஆண்டின் கருத்துரு, “மனித உரிமைகளுக்கான பழைய போராளிகளைக் கொண்டாடுதல்”.
1990 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் ஐ.நா. பொதுச் சபையால் சர்வதேச முதியோர் தினம் ஏற்படுத்தப்பட்டது.