ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதியன்று சர்வதேச முதியோர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர்கள் தினமாக அறிவித்தது.
முதியவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், அதாவது முதிர்ச்சியின் காரணமாக மற்றும் முதியோர்களை துன்புறுத்துதல் போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
முதியவர்கள் இந்தச் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளைப் பாராட்டுவதற்காகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “வயது சமத்துவத்திற்கான பயணம்” என்பதாகும்.