இந்தத் தினமானது மொழியியல் மற்றும் கலாச்சாரப் பிளவுகளை இணைப்பதில் மொழி பெயர்ப்பாளர்களின் விலைமதிப்பற்றப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவியக் கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
செப்டம்பர் 30 ஆம் தேதியன்று புனித ஜெரோம் அவர்களின் நினைவு நாள் ஆகும்.
புனித ஜெரோம் அவர்கள், வேதாகமத்தின் (பைபிளின்) பெரும்பகுதியை அதன் அசல் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து இலத்தீன் மொழியில் மொழிப்பெயர்த்தப் பணியில் புகழ் பெற்றவர் ஆவார்.
அவர் மொழிபெயர்ப்பாளர்களின் புரவலர் என்று அறியப்படுகிறார்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மொழிபெயர்ப்பு ஆனது மனித குலத்தின் பன்முகங்களை வெளிப்படுத்துகிறது’ என்பதாகும்.