கோடைகால சங்கிராந்தி என்பதாலும், ஆண்டின் மற்ற எல்லா நாட்களையும் விட சூரிய ஒளி அதிகம் பரவும் நாளான ஜூன் 21 ஆம் தேதி இத்தினத்திற்காகத் தேர்வு செய்யப் பட்டது.
சர்வதேச யோகா தினம் பற்றிய கருத்தாக்கமானது, முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்திய அரசினால் முன்மொழியப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு வசுதேவ குடும்பத்திற்கான யோகா என்பதாகும்.
சூரத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு, ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடி யோகாசனம் செய்தல் என்ற புதிய கின்னஸ் சாதனையினைப் படைத்துள்ளனர்.