TNPSC Thervupettagam
December 7 , 2022 593 days 296 0
  • கோவாவில் நடைபெற்ற நான்கு நாட்கள் அளவிலான சர்வதேச லூசோபோன் (போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள்) திருவிழாவை இந்தியா நடத்துகிறது.
  • லூசோபோன் உலகம் நான்கு கண்டங்களில் உள்ள ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
  • போர்த்துகீசிய மொழியானது, புவியின் தெற்கு அரைக்கோளத்தில் அதிகம் பேசப் படும் மொழியாகும்.
  • போர்த்துகீசிய மொழி நாடுகளின் சமூகம் (CPLP) அல்லது லூசோபோன் காமன்வெல்த், 1996 ஆம் ஆண்டில் லிஸ்பன் நகரில் நிறுவப்பட்டது.
  • அங்கோலா, பிரேசில், கபோ வெர்டே, கினியா பிசாவ், மொசாம்பிக், போர்ச்சுகல் மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப் ஆகியவை இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக உள்ளன.
  • தைமோர் லெஸ்தே மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகியவை இந்த அமைப்பில் பின்னர் உறுப்பினராக இணைந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்