சர்வதேச வரிக்குதிரை தினம் - ஜனவரி 31
January 31 , 2025
22 days
44
- இது அவற்றின் எதிர்காலத்தினை நன்கு பாதுகாப்பதற்கான வளங்காப்பு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த இனங்கள் கென்யா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
- சமவெளிப் பகுதி வாழ் வரிக் குதிரைகள் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.
- இருப்பினும், மலை வாழ் வரிக்குதிரைகள் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் வறண்ட மேட்டு நிலச் சமவெளிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
- அரிதான, கிரேவியின் வரிக் குதிரையானது, கென்யா மற்றும் எத்தியோப்பியாவின் அரிதான மரங்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
- அதன் ஆறு கிளையினங்களில் ஒன்றான குவாக்கா ஏற்கனவே அழிந்துவிட்டது.
- கிரேவியின் வரிக் குதிரையானது சோமாலியா மற்றும் சூடான் பகுதிகளில் அழிந்து விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Views:
44