துருக்கியின் இஸ்மிர் நகரில் ஆரம்பிக்கப்பட்ட 87வது இஸ்மிர் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியா பங்களிப்பாளர் நாடாகும்.
இந்தக் கண்காட்சியில், இந்தியா துருக்கிக்கான தனது ஏற்றுமதியை அதிகப்படுத்தும் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் 75 இந்திய நிறுவனங்களைக் கொண்டு ஒரு மிகப்பெரிய வியாபார கூடாரமான “Source India” என்ற முகப்பையும் துவக்கி வைக்க இருக்கின்றது.
இந்தியாவின் ஏற்றுமதிகளை அதிகப்படுத்த உலகம் முழுவதும் முக்கிய வர்த்தகக் கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கும். இந்திய வர்த்தக மேம்பாட்டுக் குழுவின் “Source India Partitions” என்ற வரிசையின் ஒரு பகுதி இதுவாகும்.
இந்திய வர்த்தக மேம்பாடு குழுவானது (Trade Promotion Council of India) மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வர்த்தகத் துறையின் வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான மேம்பாட்டு அமைப்பாகும்.