யூனிலீவர் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியான (CEO-Chief Executive Officer) பவுல் போல் மேன் சுனில் பாரதி மிட்டலிற்கு அடுத்து சர்வதேச வர்த்தகச் சங்கத்தின் (ICC-International Chamber of Commerce) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதி எண்டர்பிரைசின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரதி மிட்டல், தனக்கான இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ICC ன் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளார்.
ICC யின் கவுரவமிக்க தலைவர் பொறுப்பை 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி மிட்டல் ஏற்பார்.
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் CEO மற்றும் தலைவரான அஜய்பங்கா ICC இன் அடுத்த முதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ICC
மூலதனங்களின் தடையற்ற நகர்வு, வணிகப் பொருட்களுக்கான திறந்த சந்தைகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் உலக வணிகத்திற்கு சேவையாற்றுவதற்காக 1919ஆம் ஆண்டு ICC நிறுவப்பட்டது.
இந்த அமைப்பின் சர்வதேசத் தலைமையகம் பாரீசில் நிறுவப்பட்டது. ICCன் வணிகப் பிரச்சனைகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் 1923ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
ICC அமைப்பானது ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக மன்றத்தில் பொது ஆலோசக அந்தஸ்தை பெற்ற முதல் அமைப்பாகும். மேலும் ஐ.நா.வின் கூர்நோக்குநர் அந்தஸ்து பெற்ற முதல் அமைப்பாகும்.