சர்வதேச வலிப்பு நோய் தினம் (IED) ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் 2வது திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
இது சர்வதேச வலிப்பு நோய் வாரியம் (IBE) மற்றும் சர்வதேச வலிப்பு நோய்க்கு எதிரான கூட்டமைப்பு (ILAE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிப்பு நோய் என்பது நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களை மிகவும் உளவியல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கும் ஒரு மிகவும் பரவலான மருத்துவப் பாதிப்பு நிலையாகும்.
உலகளவில் உள்ள சுமார் 650 லட்சம் வலிப்பு நோய் பாதிப்பு கொண்ட நோயாளிகளில், தோராயமாக சுமார் 80% பேர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர் என்பதோடு அந்த நாடுகளில் 1,00,000 நபர்களுக்கு 40-70 பேர் என்ற எண்ணிக்கையில் புதியப் பாதிப்புகள் பதிவாகின்றன.
இந்தியாவில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த வலிப்பு நோய் பாதிப்பு 1000 பேருக்கு 5.59-10 என்ற வரம்பில் உள்ளது.
வலிப்பு நோய் பாதிப்பு உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகள் இந்தியாவில் தான் உள்ளனர் என்ற நிலையில் இது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையினைக் குறிக்கிறது.
நகர்ப்புற மக்களை விட கிராமப்புற மக்களில் (0.6%) அதிகப் பாதிப்பு (1.9%) பதிவாகி இருந்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “MyEpilepsyJourney” என்பதாகும்.