TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்கள்

December 19 , 2017 2531 days 936 0
  • விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station - ISS) ஸ்பேஸ் – எக்ஸ் (SpaceX) நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக பொருட்களைக் கொண்டு சென்று வருகிறது.
  • கலிபோர்னியாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் – எக்ஸ் நிறுவனம் டிராகன் எனும் விண்கலத்தை உருவாக்கியது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் வணிக ரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒப்பந்தத்தின் படி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் சரக்குகளை கொண்டு சென்று வருகிறது.
  • இந்நிலையில் முதன் முறையாக ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட ராக்கெட்டைக் கொண்டு விண்கலனை செலுத்துவதற்கு ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி டிராகன் விண்கலம் ஃபால்கான்-9 (Falcon-9) என்ற புதுப்பிக்கப்பட்ட ராக்கெட்டில் இணைக்கப்பட்டு விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • ஆளில்லாத இந்த டிராகன் விண்கலத்தை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இயந்திரக் கை போன்ற அமைப்பைப் பயன்படுத்தி பிடித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்