TNPSC Thervupettagam

சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25வது ஆண்டு நிறைவு

November 30 , 2023 362 days 336 0
  • நவம்பர் 20 ஆம் தேதியானது, சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது 1998 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தில் நிலை நிறுத்தப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பாகும்.
  • சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் சக்திக்கு இது ஒரு சான்றாக உள்ளதோடு,  இது விண்வெளி, நுண்புவியீர்ப்பு மற்றும் அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை நன்கு வளர்ப்பதில் நமது புரிதலை மேம்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கினையும்  வகித்து உள்ளது.
  • சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்கா (NASA), ரஷ்யா (Roscosmos), ஐரோப்பா (ESA), ஜப்பான் (JAXA) மற்றும் கனடா (CSA) ஆகிய நாடுகளின் விண்வெளி நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில், ரஷ்யா 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் இருந்து வெளியேறி அதன் சொந்த சுற்றுப்பாதை கண்காணிப்பு நிலையத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்தது.
  • இது வினாடிக்கு 8 கிலோமீட்டர் (5 மைல்) வேகத்தில் பயணிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்