சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புவியின் டெர்மினேட்டர் எல்லை
August 20 , 2024 95 days 122 0
நியூசிலாந்துக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் இருந்து 267 மைல் தொலைவில் உள்ள பூமியின் டெர்மினேட்டர் (எல்லை முடிவு நிலை) எல்லையின் படத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா படம் பிடித்துள்ளது.
டெர்மினேட்டர் எல்லை என்பது, பூமியின் சுழற்சி மற்றும் மாறும் பருவங்களை எடுத்துக் காட்டுகின்ற, பகல் மற்றும் இரவு இடையேயான எல்லையைக் குறிக்கும்.
ISS தினமும் 16 சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனங்களை எதிர்கொள்கிறது.
இந்த டெர்மினேட்டர் எல்லையின் வடிவம் என்பது சம இரவு பகல் தினம் மற்றும் சங்கிராந்திகளுடன் மாறுபடுவதோடு இது புவி அச்சின் சாய்வையும் குறிக்கிறது.
ட்விலைட் என்றும் அழைக்கப்படுகின்ற டெர்மினேட்டர், பூமியை அல்லது வேறு ஏதேனும் கிரகம் அல்லது வான் பொருளைப் பகல் மற்றும் இரவு நேரத்திற்கு இடையில் பிரிக்கும் ஒரு நகரும் கோடாகும்.
இந்தக் கோடு ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் ஒரு முறையும் மற்றும் சூரியன் மறையும் போது ஒரு முறையும் என இரண்டு முறை பூமியைக் கடந்து செல்கிறது.