ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 07 அன்று சர்வதேச விமானப் போக்குவரத்து தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சர்வதேச விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் ஏற்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகும்.
இந்த ஆண்டிற்கான சர்வதேச விமானப் போக்குவரத்தின் கருத்துருவானது, “எந்தவொரு நாடும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்றுதல்” என்பதாகும்.
சர்வதேச விமானப் போக்குவரத்து தினமானது 1994 ஆம் ஆண்டில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் 50-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்டது.
1944 ஆம் ஆண்டில் 54 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அமெரிக்காவின் சிகாகோவில் கூடி சர்வதேச விமானப் போக்குவரத்து மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது “சிகாகோ ஒப்பந்தம்” என்றறியப்படுகிறது.
இது 1996 ஆம் ஆண்டில் ஐ.நா.வினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.