TNPSC Thervupettagam

சர்வதேச வெண்தோல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13

June 15 , 2023 532 days 223 0
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் வெண்தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதோடு அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • அல்பினிசம் (வெண்தோல் நோய்) என்பது ஒரு அரிதான மற்றும் மரபணு ரீதியாக மரபு வழியாகப் பெறப்பட்ட பாதிப்பு நிலையாகும் என்பதோடு, இந்த நோயினால் பாதிக்கப் படுபவரின் தோல், முடி மற்றும் கண்களில் சிறிதளவு அல்லது நிறமி (மெலனின்) இழப்பு ஏற்படுகிறது.
  • இது சூரியன் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு தன்மையினை ஏற்படுத்துகிறது.
  • இது ஒரு தொற்றாத நோய் நிலையாகும், என்றாலும் அல்பினிசம் பாதிப்பு உள்ளவர்கள் பார்வைக் குறைபாடுடையவர்களாகவும், தோல் புற்றுநோய்க்கு உள்ளாகும் ஒரு பெரும் வாய்ப்பினைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
  • 2013 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமானது, "அல்பினிசம் பாதிப்பு உள்ள  நபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடு" என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உள்ளடக்கமே வலிமை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்