சர்வதேச வெப்பாற்றல் சோதனை உலை (ITER/ International Thermonuclear Experimental Reactor)
August 3 , 2020 1579 days 808 0
சர்வதேச வெப்பாற்றல் சோதனை உலையானது தனது 1 ஆண்டு கால கூடுகை நிலைக்குள் நுழைந்துள்ளது.
இது ஒரு மிகப்பெரிய சர்வதேச அணுக் கரு இணைவு ஆராய்ச்சி மற்றும் பொறியியல்சார் திட்டமாகும்.
இது உலகின் மிகப்பெரிய காந்த வரையறை கொண்ட பிளாஸ்மா இயற்பியல் சோதனையாக இருக்கும்.
இது ஒரு சோதனை ரீதியிலான டோகாமாக் (tokamak) என்ற ஒரு அணுக்கரு இணைவு உலையாகும். இது தெற்கு பிரான்சில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது அமைதிப் பயன்பாடுகளுக்காக வேண்டி அணுக்கரு இணைவின் அறிவியல்சார் மற்றும் தொழில்நுட்பச் செயலாக்க முறையை மேற்கொள்ள இருக்கின்றது.
இது தூய்மையான, குறைந்த செலவு கொண்ட மற்றும் அதிக அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யும் முதலாவது இணைவு சாதனமாக இருக்கும்.
இந்தத் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய 7 உறுப்பு நாடுகளில் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றது.
அணுக்கரு இணைவானது சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் ஆற்றல் மூலமாக விளங்குகின்றது.