நவீன சுகாதாரத் துறையில் மருத்துவத் தோற்றமாக்கத்தின் மாறிவரும் நிலையைக் கொண்டாடுவதற்காக இந்நாள் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்நாள் கதிர்ப்படப் பதிவாளர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேசச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
சர்வதேசக் கதிரியக்கவியல் தின அனுசரிப்பு என்பது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 9 வரை தேசிய கதிரியக்கத் தொழில்நுட்ப வாரமாக ஒரு வாரம் கொண்டாடப் படுகின்றது.
நவம்பர் 8 ஆம் தேதியானது 1895 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த ஆண்டின் நினைவு நாள் ஆகும்.
2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: விளையாட்டுத் தோற்றமாக்கம் என்பதாகும்.