இந்தத் தினமானது மனித நல்வாழ்வு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகத் திகழும் கல்வியின் சிறப்பை உணர்த்தும் விதமாக 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் - ‘மக்கள், உலகம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான கற்றல்’ என்பதாகும்.
கல்வியுரிமை பற்றி
மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனத்தின் 26வது பிரிவில் கல்விக்கான உரிமை கூறப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாடானது, உலக நாடுகள் அனைத்தும் உயர்கல்வியை அனைத்து மக்களும் அணுகக் கூடியதாக மாற்றும் என்று கூறியுள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்கு 4 ஆனது 2030 ஆம் ஆண்டுக்குள் “அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கிய மற்றும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்வதோடு, அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகள் வழங்குவதை மேம்படுத்துவதையும்” நோக்கமாகக் கொண்டுள்ளது.