சர்வதேசக் கிரிக்கெட் மன்றத்தின் (ICC) தசாப்தத்திற்கான கிரிக்கெட் மீதான உயர்நிலை விருது
January 1 , 2021 1425 days 775 0
இந்திய அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ். தோனி அவர்கள் இந்த விருதினை வென்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் போது ஒரு வினோதமான முறையில் ரன் அவுட் என அறிவிக்கப்பட்ட முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இயான் பெல் என்பவரைத் திரும்ப அழைத்து விளையாடச் சொன்னமைக்காக இவர் இந்த விருதை வென்றுள்ளார்.
இந்தியாவின் விராட் கோலி தசாப்தத்திற்கான ICC ஆண்கள் கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்பீல்டு சோபர்ஸ் விருதினை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரி தசாப்தத்திற்கானICC பெண்கள் கிரிக்கெட் வீரருக்கான ராய்ச்செல் ஹேஹோ-பிளிண்ட் விருதை வென்றுள்ளார்.
இதர விருதுகள் பின்வருமாறு
தசாப்தத்திற்கான ICC ஆண்கள் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வீரர் – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
தசாப்தத்திற்கான ICC ஆண்கள் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர் – விராட் கோலி (இந்தியா)
தசாப்தத்திற்கான ICC ஆண்கள் 20 இருபது போட்டி கிரிக்கெட் வீரர் – ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)
தசாப்தத்திற்கான ICC ஆண்கள் துணைநிலை கிரிக்கெட் வீரர் – கைல் கோயட்செர் (ஸ்காட்லாந்து)
தசாப்தத்திற்கான ICC பெண்கள் ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர் – எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
தசாப்தத்திற்கான ICC பெண்கள் 20 இருபது போட்டி கிரிக்கெட் வீரர் - எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
தசாப்தத்திற்கான ICC பெண்கள் துணைநிலை கிரிக்கெட் வீரர் – காத்ரின் பிரைஸ் (ஸ்காட்லாந்து)