இது ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பான இளையவர்களுக்கான புத்தகங்கள் குறித்த சர்வதேச வாரியத்தினால் (International Board on Books for Young People - IBBY) அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
1967 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இத்தினமானது ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த தினமான ஏப்ரல் 2 ஆம் தேதியை ஒட்டியுள்ள நாட்களில் அனுசரிக்கப் படுகின்றது.
இது வாசிப்பின் மீதான நேசிப்பை ஈர்ப்பதற்காகவும் குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த தகவலைப் பரப்புவதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டின் சர்வதேசக் குழந்தைகளுக்கான புத்தகத் தினத்தை ஆதரிக்கும் நிறுவனம் IBBY ஸ்லோவேனியா ஆகும்.