உலகக் குழந்தைகள் தினமானது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் சர்வதேசக் குழந்தைகள் தினமாக ஏற்படுத்தப் பட்டது.
சர்வதேச அளவில் ஒற்றுமையை ஏற்படுத்துதல், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதியன்று இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
மேலும் 1990 ஆம் ஆண்டு முதல், உலகக் குழந்தைகள் தினமானது ஐ.நா பொதுச் சபை ஏற்றுக் கொண்ட இத்தேதியின் ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது.
20.11.1959 - குழந்தைகள் உரிமைகள் பிரகடனம்,
20.11.1989 - குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம்.