TNPSC Thervupettagam

சர்வதேசக் கூட்டுறவு தினம் – ஜூலை 02

July 12 , 2022 776 days 382 0
  • 1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்தத் தினத்தினை அறிவித்தது.
  • சர்வதேசக் கூட்டுறவுக் கூட்டணி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்தத் தேதியானது தேர்வு செய்யப்பட்டது.
  • கூட்டுறவுச் சங்கங்கள் ஆனது இந்த ஆண்டு 100வது சர்வதேசக் கூட்டுறவு தினத்தை கொண்டாடின.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் கூட்டுறவு ஆண்டான 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரையிலான ஒரு தசாப்தத்தைக் குறிக்கிறது.
  • இந்தியாவில் 100வது சர்வதேசக் கூட்டுறவு தினம் ஆனது, இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் மற்றும் இந்தியத் தேசியக் கூட்டுறவு ஒன்றியம் (NCUI) ஆகியவற்றினால் இணைந்து ஜூலை 04 ஆம் தேதியன்று புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியத் தேசியக் கூட்டுறவு ஒன்றியம் என்பது கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றினை வழங்குவதை மையமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களின் ஒரு உயர்நிலை அமைப்பாகும்.
  • 100வது சர்வதேசக் கூட்டுறவு தினத்தின் கருத்துரு, "கூட்டுறவுகள் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன" என்பதாகும்.
  • இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களானது உலகிலேயே மிகப்பெரியது ஆகும்.
  • AMUL, IFFCO, KRIBHCO, NAFED போன்றவை இந்தியாவில் உள்ள நன்கு அறியப்பட்ட வெற்றி பெற்ற சில கூட்டுறவு நிறுவனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்