TNPSC Thervupettagam

சர்வதேசச் சுற்றுலா சிறப்பம்சங்கள் – 2023

September 28 , 2023 423 days 301 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பு (UNWTO) ஆனது சமீபத்தில் சர்வதேசச் சுற்றுலா குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும் என்ற நிலையில் இத்துறையானது அதன் ஏற்றுமதி வருவாயில் 2.6 டிரில்லியன் டாலர் மதிப்பினை இழந்தது.
  • 2019 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனாக இருந்த, சர்வதேசச் சுற்றுலாப் பயணிகள் வருகை அல்லது ஒருநாள் பார்வையாளர்களின் வருகையானது 2020 ஆம் ஆண்டில் 400 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • இது ஒரு வருடத்தில் பதிவான 72 சதவீத வீழ்ச்சியாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் பதிவான ஏற்றுமதி வருவாய் ஆனது பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளில் 62 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், 1.1 டிரில்லியன் டாலர் இழப்பு என்பது அதில் பதிவாகியுள்ளது.
  • இது அந்த ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட உலகளாவிய இழப்பில் 44 சதவீதமாகும்.
  • சர்வதேசச் சுற்றுலா துறையின் வருவாய் ஆனது 2019 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவிய ஏற்றுமதியில் ஏழு சதவீத பங்கினை கொண்டுள்ளது.
  • 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த விகிதம் மூன்று சதவீதமாகக் குறைந்து உள்ளது.
  • சர்வதேசச் சுற்றுலா ஆனது 2021 ஆம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 456 மில்லியன் வருகையை எட்டியுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டில் பதிவானதை விட 49 மில்லியன் அதிகமாக இருந்தாலும், 2019 ஆம் ஆண்டின் பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளை விட (1,465 மில்லியன்) 69 சதவீதம் குறைவாக உள்ளது.
  • பெருந்தொற்றின் காரணமாக, 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக இருந்த சுற்றுலா நேரடி மொத்த உள்நாட்டு உற்பத்தி (TDGDP) அளவில் மதிப்பிடப்படும் சுற்றுலாத் துறையின் பொருளாதாரப் பங்களிப்பு ஆனது, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்