- 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேசத் தாய் மொழி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
- பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை மேம்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
- சர்வதேசத் தாய் மொழி தினத்தைக் கொண்டாடும் சிந்தனையை முன்வைத்தது வங்கதேசம் ஆகும்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள் : எல்லைகளற்ற மொழிகள் (Languages without Borders) என்பதாகும்.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 2008 ஆம் ஆண்டை சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவித்தது.
- உலகளவில் 40% மக்களுக்குத் தாம் பேசும் அல்லது புரிந்து கொள்ளும் மொழியில் கல்விக்கான அணுகல் கிடைப்பதில்லை.
மத்ரி பாஷா திவாஸ் (Matri Bhasha Diwas)
- மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகமானது கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழி நிறுவனங்களுடன் சேர்ந்து மத்ரி பாஷா தினத்தை கொண்டாடுகிறது.
- ‘நம் பன்மொழி பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்‘ என்ற கருப்பொருளின் கீழ் இந்தத் தினம் கொண்டாடப்படுகின்றது.
- இது ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்’ (EK Bharat shreshtha Bharat) உந்துதலின் பிரதிபலிப்பாக அமைகின்றது.