TNPSC Thervupettagam

சர்வதேசப் பனிச் சிறுத்தை நாள் - அக்டோபர் 23

October 27 , 2020 1404 days 481 0
  • பனிச்சிறுத்தையானது மனிதனின் சிறந்த நண்பன் என்று அழைக்கப் படுகிறது.
  • கிர்கிஸ்தானின் பிஸ்கேக்கில் (Bishkek) நடைபெற்ற முதல் உலகளாவிய பனிச் சிறுத்தை மன்றத்தில் இது அறிவிக்கப் பட்டது.
  • உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் கிர்கிஸ்தான் அரசால் துவங்கப் பட்டது ஆகும்.
  • இந்தத் திட்டமானது "2020 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பான 20" (Secure 20 by 2020) என்ற முயற்சியின் கீழ் பனிச் சிறுத்தைக்கான 20 நிலப்பரப்புகளைப் பாதுகாக்கிறது.
  • இந்தியாவானது இந்த திட்டத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடாகும்.
  • இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் சீனா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், மங்கோலியா, கஜகஸ்தான், பூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியனவாகும்.
  • இந்த நாடுகள் அனைத்தும் பனிச் சிறுத்தை வாழிடங்களை கொண்டுள்ளன.
  • இந்த நாடுகள் பிஸ்கேக் பிரகடனத்தில் (Bishkek Declaration) கையொப்பமிட்டுள்ளன.
  • 2015 ஆம் ஆண்டானது சர்வதேச பனிச் சிறுத்தையின் ஆண்டாக அறிவிக்கப் பட்டு இருந்தது.
  • உலகளாவிய பனிச் சிறுத்தை எண்ணிக்கையில் இந்தியாவில் பத்து சதவீதம் உள்ளது.
  • இது இந்தியாவின்  வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 என்ற சட்டத்தின்  அட்டவணை ஒன்றின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் பனிச் சிறுத்தை பாதுகாப்புத் திட்டமானது 2009 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • பனிச் சிறுத்தைகள் காணப்படும் மாநிலங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • அவை அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்