பன்னாட்டு "Card Not Present - நேரடி அட்டைச் சமர்ப்பிப்பு இன்றி மேற்கொள்ளப்படும்" (CNP) பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் அங்கீகாரக் கூறுகளை (AFA) செயல்படுத்த உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
AFA ஆனது, உள்நாட்டு எண்ணிம கட்டணச் சூழல் அமைப்பில் மோசடியைக் நன்கு குறைப்பதில் ஏற்கனவே அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
தற்போது, கட்டாயப் பதிவு, மாற்றம் அல்லது நீக்கம் போன்ற நடவடிக்கைகளில் AFA அவசியம் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அமைப்பின் கீழ் தானியங்கு அடிப்படையிலான பற்று கட்டணங்களுக்கு கூட வாடிக்கையாளர்கள் வங்கியால் விதிக்கப்பட்டபடி, OTP அல்லது வேறு அங்கீகார முறை மூலம் தங்களது கட்டணத்தினை அங்கீகரிக்க வேண்டும்.