மும்பையில் அமைந்துள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் சர்வதேசப் பருத்தி ஆலோசனைக் குழுவின் (ICAC) அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் 81வது முழுமையான அமர்வுகளின் கூட்டமானது ஜவுளி அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் யாதெனில் "பருத்தி மதிப்புச் சங்கிலி: உலகளாவிய செழுமைக்கான உள்ளூர் கண்டுபிடிப்புகள்".
ICAC அமைப்பின் முழுமையான கூட்ட அமர்வுகளானது ஒவ்வொரு ஆண்டும் அதன் உறுப்பு நாடுகளில் நடத்தப்படுகிறது.
இது பருத்தி உற்பத்தி, நுகர்வு மற்றும் வர்த்தகம் செய்யும் நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் சங்கமாகும்.
இது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள வாஷிங்டனைத் தலைமையகமாக கொண்டு 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழுவின் (ICAC) உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இதன் 28 உறுப்பினர்களில் பெரும்பாலானவை உலகளவில் அதிக பருத்தியினை உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.
ஆனால் உலகளவில் அதிகப் பருத்தியினை உற்பத்தி செய்யும் 10 பெரிய உற்பத்தியாளர் நாடுகளில் இரண்டு (சீனா மற்றும் துர்க்மெனிஸ்தான்) பெரிய உற்பத்தியாளர் நாடுகளானது இதில் உறுப்பினர்களாக சேரவில்லை.
பருத்தி சாகுபடி செய்வதில் உலகி இந்தியா மிகப்பெரிய பரப்பளவினைக் கொண்டுள்ளதோடு, பருத்தி உற்பத்தியிலும் உலகளவில் இரண்டாவது இடத்தினை வகிக்கின்றது.
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகியவை அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யும் முக்கியமான மாநிலங்களாகும்.
இம்மாநிலங்கள் நாட்டின் பருத்தி உற்பத்தியில் 65 சதவீதத்தினை உற்பத்தி செய்கின்றன.
கஸ்தூரி பருத்தி பாரத் என்பது இந்தியாவின் மதிப்புமிக்க தர அடையாளத்தினைப் பெற்ற பருத்தி ஆகும்.