TNPSC Thervupettagam

சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் – ஏப்ரல் 25

April 28 , 2020 1675 days 522 0
  • முதன்முறையாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேசப் பிரதிநிதிகள் தினத்தை அனுசரித்தது.
  • ஐக்கிய நாடுகள் நிறுவதலுக்கு காரணமான ஒரு நிகழ்வான சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கின் 75வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது. 
  • 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று, முதன்முறையாக 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஒன்று கூடினர்.
  • இது சர்வதேச அமைப்பு மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு என்று அழைக்கப் படுகின்றது. 
  • இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் உலகப் போரிற்குப் பின் உலக அமைதியை மீட்டெடுத்தல் மற்றும் சர்வதேச விதிகளை விதித்தலுக்காக ஒன்றிணைதல் என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சாசனமானது இக்கருத்தரங்கு நடைபெற்று 2 மாதங்களுக்கு பின்பு (1945, ஜுன் 25) வடிவமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்