2019 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2019 ஆம் ஆண்டின் சர்வதேசப் புத்தாக்கக் குறியீட்டை (Global Innovation Index - GII) புது தில்லியில் வெளியிட்டார்.
இந்தியா கடந்த ஆண்டை விட 5 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் மிகவும் புத்தாக்கம் பெற்ற பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
GII என்பது ஒரு பொருளாதாரத்தின் புத்தாக்கச் செயல்பாட்டை அளவிடுவதற்கான ஒரு முன்னனி ஆதாரமாக விளங்குகின்றது. இது GII-ன் 12-வது பதிப்பாகும்.
இது கார்னெல் பல்கலைக் கழகம், இன்சீட் வணிகப் பள்ளி மற்றும் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.