TNPSC Thervupettagam

சர்வதேசப் புத்தாக்கக் குறியீடு 2019

July 25 , 2019 1953 days 966 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2019 ஆம் ஆண்டின் சர்வதேசப் புத்தாக்கக் குறியீட்டை (Global Innovation Index - GII) புது தில்லியில் வெளியிட்டார்.
  • இந்தியா கடந்த ஆண்டை விட 5 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் மிகவும் புத்தாக்கம் பெற்ற பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • GII என்பது ஒரு பொருளாதாரத்தின் புத்தாக்கச் செயல்பாட்டை அளவிடுவதற்கான ஒரு முன்னனி ஆதாரமாக விளங்குகின்றது. இது GII-ன் 12-வது பதிப்பாகும்.
  • இது கார்னெல் பல்கலைக் கழகம், இன்சீட் வணிகப் பள்ளி மற்றும் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்