இத்தினமானது பாலினச் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதனை ஆதரிப்பதற்கும் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
இந்த நாள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் மனித உரிமைகளை முழுமையாக கிடைக்கப் பெறச் செய்வதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பெண்கள் உரிமைகளில் முதலீடு செய்யுங்கள்: நமது தலைமை, நமது நல்வாழ்வு" என்பதாகும்.